தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அதன்படி பொதுத் தேர்வு எழுதிய 8 லட்சத்து 07,098 மாணவர்களில் 7 லட்சத்து 43,232 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
11 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் 97.76% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 96.97% இரண்டாம் இடம். விருதுநகர் மாவட்டம் 96.23% மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

