பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் ரன்வீர் சிங் தனது அடுத்த படத்தில் 19 வயது நடிகை சாரா அர்ஜுனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாரா அர்ஜுன் தமிழ் திரையுலகில் தெய்வத்திருமகள் சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழ் பெற்றவர். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது பாலிவுட்டில் முழு நீள கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். ஆதித்ய தார் இயக்கத்தில் உருவாகும் துரந்தர் என்ற இந்தி திரைப்படத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடிக்கிறார்.
இப்படத்தில் ரன்வீர் சிங்குடன் சஞ்சய் தத் ஆர் மாதவன் அர்ஜுன் ராம்பால் அக்ஷய் கண்ணா உள்ளிட்ட பிரபல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரன்வீருக்கு 39 வயதாகும் நிலையில் சாராவுடன் 20 வயது வித்தியாசம் இருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இருப்பினும் இதற்கு முன்பு பாலிவுட்டில் தீபிகா படுகோனே அனுஷ்கா ஷர்மா போன்ற நடிகைகள் ஷாருக்கானுடன் 20 வயது இடைவெளியில் நடித்ததை ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த புதிய ஜோடி பற்றிய அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் கலவையான கரவைகள் எழுந்துள்ளன. சாராவின் நவீன தோற்றம் மற்றும் நடிப்புத் திறன் குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேநேரம் வயது வித்தியாசம் குறித்து சிலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் பாலிவுட் வட்டாரங்களில் இந்த ஜோடி உறுதியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய கூட்டணி பாலிவுட்டில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.