Site icon No #1 Independent Digital News Publisher

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த பெண் யூ டியூபர் உள்பட 6 பேர் கைது!

 

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த பெண் யூ டியூபர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இதனிடிடையே, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை களை எடுக்கும் பணியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்தவர்கள் ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், அரியானா மற்றும் பஞசாப் மாநிலங்களில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிராவல் வித் ஜோ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் பாகிஸ்தானுக்கு முகவர்களாகவும், ரகசியங்களைக் கொடுப்பவர்களாகவும், நிதிப் பரிமாற்றம் செய்பவர்களாகவும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை பாகிஸ்தான் ராணுவத்திற்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் ஜோதி மல்ஹோத்ரா செயல்பட்டு வந்துள்ளார். அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version