Site icon No #1 Independent Digital News Publisher

சத்தீஷ்கரில் 26 நக்சல்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை !

 

சத்தீஷ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் பகுதியில் அமைந்திருக்கும் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீசார், சி.ஆர்.பி.எப். வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version