Site icon No #1 Independent Digital News Publisher

தனித்துப் போட்டி – மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு!

இந்தியா கூட்டணியில் இருந்தாலும் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பாஜக, வரும் தேர்தலிலும் வென்று மூன்றாவது ஆட்சியை முறையாக தக்கவைத்துக்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிடும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன.

காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகள் இணைந்த ஒருங்கிணைந்து நாடு முழுவதும் போட்டியிட திட்டமிடப்பட்டன. இந்த கட்சியின் பிரதிநிதிகள் பாட்னா, பெங்களூரு, மும்பை என பல்வேறு பகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். காணொலி மூலமாகவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் காங்கிரசின் முழு கவனமும் அந்தப்பக்கம் திரும்பிய கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு மத்திய பிரதேசத்தில் சீட் ஒதுக்க காங்கிரஸ் மறுப்பு தெரிவித்ததாக அகிலேஷ் குற்றம் சாட்டினார்.

ஆனால் இந்த தேர்தலில் 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிப்பெற்றது. மூன்று மாநிலங்களில் தோல்வியடைந்த பிறகு, ’இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அக்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே டிசம்பர் 6ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

Exit mobile version